• Nov 22 2024

'சரிகமப' மேடையை அதிர வைத்த ஈழத்து இளைஞன்.. நடுவர்கள் கொடுத்த வாக்கு..! மெய்சிலிர்க்கும் சம்பவம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த அசானி, கில்மிஷா வரிசையில் தற்போது இந்திரஜித் திகழ்ந்து வருகின்றார். இவருடன் வத்தளையை சேர்ந்த விஜய் லோஷன் என்பவரும் பாட்டுப் பாடி அசத்தி வருகின்றார்.

இலங்கை உள்ள பதுளை மாவட்டத்தில் பூனாகலையை சேர்ந்த இந்திரஜித், சரிகமப மேடையில் மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்தின் பாடல்களை பாடி அரங்கை அதிர வைத்து வருகின்றார். 

ஆரம்பத்தில் இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து அந்த பணத்தின் ஊடாகவே சென்னைக்கு டிக்கெட் வாங்கி வந்ததாக மிகவும் உருக்கமாக கூறியிருந்தார். அத்துடன் ஓடிசனில்  தேர்வான எனக்கு தங்குவதற்கு இடம் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் மூன்று நாட்களாக சென்னை பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் தான் தூங்கினேன். ஆனாலும் தற்போது எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் நிச்சயம் அதில் வெற்றி பெற்று தான் திரும்புவேன் என்று பேசியிருந்தார்.


இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இறுதியாக இடம்பெற்ற சரிகமப நிகழ்ச்சியில் இந்திரஜித், பாலசுப்ரமணியம் பாடிய 'வான் நிலா நிலா அல்ல' என்ற பாடலை பாடி நடுவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.


மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களில் மிகவும் கடினமான பாடல்களை தேர்ந்தெடுத்து அதனை மிகவும் ஈசியாக  பாடுவதில் கை தேர்ந்தவராக காணப்படுகிறார். இவர் இந்த பாடலை பாடி முடித்ததும் நடுவர்கள் எல்லாரும் எழுந்து  நின்று அவருக்கு கை தட்டி தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.


மேலும் இதன் போது பேசிய பிரபல பாடகர் கார்த்திக்,  நீங்க சங்கீதம் முறையாக கற்றுக் கொண்டீர்களா என்று கேட்க, அவர் இல்லை எல்லாம் கேள்வி ஞானம் தான் என்று சொன்னதும் அவரால் நம்ப முடியாமல் போனது. அதற்கு காரணம் சங்கீதம் கற்றுக் கொண்டவரால் கூட இந்த பாடலை இவ்வளவு அழகாக பாட முடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் பாலசுப்ரமணியம் அப்பாவின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. அதுதான் எனது ஆசையாக இருக்கின்றது. அவரது நினைவிடத்திற்கு சென்று பாட்டு பாட வேண்டும் என்று இந்திரஜித் கூறியிருந்தார்.

இதைக்கேட்ட பாடகர் கார்த்திக் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், நிச்சயம் ஒரு நாளைக்கு சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் மறைந்த பாடகர் பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று, அவரிடம்  ஆசீர்வாதம் வாங்கி வருவதற்காக ஏற்பாடு செய்து தருவதாக வாக்கு பண்ணியுள்ளார். தற்போது இந்திரஜித் பாடிய பாடல் வைரலாகி வருவதுடன், அவருடைய ஊரிலும் அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement