தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் வசந்த் ரவி. இப்போது, அவர் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘இந்திரா’, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்திரா’ ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை சபரிஸ் நந்தா இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தில் வசந்த் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை மெஹ்ரின் பிரசாதா. அவரின் அழகிய தோற்றமும், கதாபாத்திரத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நடித்திருப்பதும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் அஜ்மல் தசீன். அத்தகைய படத்தின் டிரெய்லர் தற்பொழுது யூடியூபில் வெளியாகி அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
Listen News!