• Jan 18 2025

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு அவமானமா இருக்கு.. மஞ்சு வாரியர் அளித்த திடீர் பேட்டி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் தனிப்பட்ட சில காரணங்களினால் சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வில் இருந்தார்.

இதை தொடர்ந்து ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் மீண்டும் சினிமா துறையில் கம்பேக் கொடுத்தார். தற்போது தனக்கேற்ற நல்ல திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.. இவருக்கு மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

தமிழில் இவர் அறிமுகமான படம் தான் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருப்பார். அதில் வயது முதிர்ச்சியான நடிப்பில் மஞ்சு வாரியர் நடித்ததோடு, தெளிவான தென் தமிழகத்து தமிழ் உச்சரிப்பின் மூலம் அசத்தி  இருப்பார்.

இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். அண்மையில் தான் இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், லேடி  சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தொடர்பாக தனது கருத்தினை முன் வைத்துள்ளார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

அதாவது, என்னை ஒரு சில லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது இணையத்தில் தேவையில்லாத விவாதங்களை உண்டாக்கி வருகின்றது. எனக்கு இது தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது. லேடி  சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எனக்கு சில வரைமுறைகளை வைத்திருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் ரசிகர்களின் அன்பு ஒன்றே போது என பதில் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement