• Jan 19 2025

கலைஞர் நினைவு நாளில் வைரமுத்து பகிர்ந்திருக்கும் கவிதை !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று அரசியல் மற்றும் திரைத்துறையினர் இடமிருந்து கலைஞரின் நினைவுப்பகிர்வுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.திரைத்துறை மற்றும் அரசியல் களங்களில் தன்னை வெல்லமுடியா உயரத்தில் நின்ற கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 07இல் இறைபதமடைந்தார்.

Image

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவு நாளான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில்  அவரது மகனும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவியை 5 முறை அலங்கரித்த கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் நினைவு கவிதையொன்றை பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

Image

இன்றைய தினம் கோபாலபுரம் சி.ஐ.டி காலனியில் அமைந்திருக்கும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ள கவிஞர் அஞ்சலியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நினைவு கவிதையொன்றையும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த கவிதை வருமாறு ;

உன் பிறந்தநாளுக்கும் நினைவு நாளுக்கும் வேறுபாடு ஒன்றுண்டு

நீ பிறந்த நாளில் ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே பிள்ளையாகினாய்

நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய்


குடகுமலை மழையால் மேட்டூர் நீர்மட்டம் உயர்வது மாதிரி

ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது

வணங்குகிறோம் உங்களை; வாழ்த்துங்கள் எங்களை.....




Advertisement

Advertisement