• Jan 18 2025

பாக்கியாவை வாசலில் வழி மறித்து ஜெனி சொன்ன விஷயம்! சிக்கலில் கோபி கொடுத்த ஐடியா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், செல்வி பாக்கியாவிடம் ஈஸ்வரிக்கு உன்னையும் கோபி சாரையும் திரும்ப சேர்த்து வைக்கிற ஐடியா இருக்கு என்று சொல்ல, அப்படி ஒரு ஐடியா இருந்துச்சுன்னா இனிமேல் யாரையும் பார்க்க மாட்டேன் இரண்டு பேருக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு நான் எங்கேயாவது போய் விடுவேன் என்று சொல்லுகின்றார் ஈஸ்வரி.

இதை தொடர்ந்து வீட்டில் கோபிக்கு ஈஸ்வரி உணவு கொடுக்கின்றார். அவர் போதும் என்று சொல்லவும் இது போதாது என கோபிக்கு ஊட்டி விடுகின்றார். அவருடன் இனியாவும் செழியனும் கூட இருந்து கோபியை விழுந்து விழுந்து கவனிக்கின்றார்கள்.

இதை பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெனி வெளியே செல்லுகிறார். அத்துடன் கோபி ராதிகாவை பார்க்க செல்ல உள்ளதாக சொல்லவும், அவதான் உன்ன வந்து பார்க்கணும் நீ போக வேண்டாம் என்று ராதிகா வந்த விஷயத்தை மறைத்து விடுகின்றார் ஈஸ்வரி.

d_i_a

இதனால் பாக்யா வந்ததும் நீங்க இப்போதைக்கு உள்ள போகாதீங்க என்று நடந்தவற்றை ஜெனி பாக்கியாவிடம் சொல்லுகின்றார். 


மேலும் இனியாவுக்கு காலேஜில் அசைன்மென்ட் இருப்பதாக கோபியிடம் சொல்லி ஐடியா கேட்க, அவர் போனில் சில ஆப்ஸ் இருக்கு அதுவே எல்லாம் சொல்லித் தரும் என்று டக்கு டக்கு என்று இனியாவுக்கு எடுத்துக் கொடுக்கின்றார். இதை பார்த்து செழியனும் எப்படி இவ்வளவு அப்டேட்டா இருக்கீங்க என்று இன்ப அதிர்ச்சி அடைகின்றார்.

இறுதியாக பாக்யா தனக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்ததாகவும் அதில் தனக்குத் தெரியாத லெப்னிஸ் டிஷ் செய்ய சொன்னதாகவும்  இதற்கு என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, ஜெனி செழியனை கூப்பிட்டு ஐடியா கேட்கின்றார்கள். இதன் போது கோபியும் அங்கே வந்து இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வு, லெப்னிஸ் டிஸ் தயாரிக்க தெரிந்த ஒருவரை தற்போதைக்கு வேலைக்கு எடுப்பது தான் என்று சொல்ல, இதை கேட்டு பாக்கியா திகைத்துப் போய் நிற்கிறார்.

Advertisement

Advertisement