நடிகர் ஜெயம் ரவி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. இதனை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இருந்து என்னை இழுக்குதடி என்ற பாடல் வெளியாகி இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தீ பாடிய இந்த பாடல் வெளியாகிய நாளிலிருந்து படு வைரலாகி வந்தது. டிஃடோக், இன்ஸராகிரேம் என எல்லா வலைத்தளங்களிலும் இந்த பாடலை ரசிகர்கள் வைப் பண்ணி கொண்டு இருக்கிறார்கள். தற்போது வரையில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
அதிலும் முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் ஒலிக்கும் "என்னை இழு இழு இழுக்குதடி.." பாடல் வரிக்கும் ரசிகர்கள் அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். தற்போது இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 20-ம் திகதி வெளியிட திரைப்பட குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதன் ப்ரோமோஷன் பணிகள் தொடங்க உள்ளன நிலையில் தற்போது என்னை இழுக்குதடி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
"d_i_a
இந்த பாடலின் மேக்கிங் ஸ்பாட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் என்னை இழுக்குதடி பாடலுக்கு எப்படி ஆடுவது என நடன கலைஞரிடம் கேட்டு ஆடி பார்க்கிறார். அதனை கிருத்திகா உதயநிதிக்கும் ஆடி காட்டி இப்படியா ஆடணும் என்பது போல பாவனை செய்கிறார். இதனை பார்த்து ஷூட்டிங்கில் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். இவ்வாறு சுவாரஷ்யமாக வெளியாகிய மேக்கிங் வீடியோ இதோ..
Listen News!