• Jul 16 2025

ஊர் பெண்ணின் கதை உலக மேடையில்..! “அங்கம்மாள்” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை தான் கோடி துணி. அந்தக் கதையை மையமாக வைத்து இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள “அங்கம்மாள்” திரைப்படம், நியூயோர்க் திரைப்பட விழாவில் (New York Film Festival 2025) “சிறந்த திரைப்படம்” என்ற விருதை வென்றுள்ளது. 


அது மட்டுமல்லாமல், பல்வேறு சர்வதேச திரையரங்குகளில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. இந்த வெற்றி, தற்போது உலகமெங்கும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், கலைசார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்களுக்கான ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


அங்கம்மாள் படத்தின் கதை, நகரத்தில் வசிக்கும் மகன் தனது காதலியுடன் தனது தாயை அறிமுகப்படுத்தும்போது, அவரது அம்மா ஜாக்கெட் அணியாமல் புடவை உடுக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சுற்றியே வருகின்றது. அத்தகைய படத்திற்கு இப்படி ஒரு விருது கிடைத்ததை நினைத்து படக்குழு சந்தோசத்தில் உள்ளது.

Advertisement

Advertisement