• Aug 06 2025

தவறு செய்துவிட்டேன்.. மகனை கவனித்து கொள்ளுங்க! நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ஸ்ரீகாந்த்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நட்சத்திர வரிசையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றிருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். 90களில் தொடங்கி 2000ம் வரைக்கும் பல வெற்றிப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவர் பல வெற்றிப் படங்களின் வழியாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.


அத்தகைய ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து தொலைந்து, தனிப்பட்ட வாழ்க்கையிலேயே முழுமையாக மூழ்கிய நிலையில் இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் போது, நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் ஒரு சில மணிநேரத்திலேயே இணையம் மற்றும் ஊடகங்களில் பரவியது. அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவரிடையிலும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் முன் பொலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரணை செய்த நீதிபதி தயாளன் முன்னிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் மிகவும் உருக்கமான மனநிலையுடன் பேசினார்.

அவரது பரிதாபமான வாக்குமூலம் நீதிமன்றத்தை சோகத்தில் ஆழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அவர், “நான் தவறு செய்துவிட்டேன். நான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும் மன்னிப்பு கேட்கிறேன். என் மகனை யாராவது கவனித்துக் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement