• Jan 20 2025

வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! குவைத் சம்பவத்திற்கு கமல்காசன் இரங்கல் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையிலேயே இதற்கு இரங்கல் தெரிவித்து கமல் காசன் x தளத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் "குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமென வலியுறுத்துகிறேன்.'  என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement