• Jan 20 2025

என்ட கல்யாணத்துக்கு கட்டாயம் வாடி.. சமந்தாவை நேரில் சந்தித்து சொன்ன வரலட்சுமி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அந்தஸ்தோடு சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் நடிகை வரலட்சுமி. இவர் சிம்புவுடன் போடா போடி என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

இது தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழிகளிலும் தனது திறமையை காட்டி யதார்த்தமாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதிலும் தமிழில் வெளியான சண்டைக்கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் வில்லியாக நடித்து இருந்தார் பட்டையை கிளப்பியிருந்தார்.

ஹனுமான் திரைப்படத்திலும் ஹீரோவுக்கு அக்காவாக நடித்திருந்த வரலட்சுமியின் நடிப்பு மிகவும் வரவேற்கப்பட்டது. இந்த படமும் 300 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது..


தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்திற்கு தயாரான நிலையில், தனக்கு நெருங்கிய வட்டாரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தனது திருமண அழைப்பிதழை கொடுத்து வருகின்றார்.

இந்த நிலையில், நடிகை சமந்தாவை நேரில் சந்தித்து தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பிதழ் வழங்கியுள்ளார் வரலட்சுமி. இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement