விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் எலிமினேஷன் ஆகி வெளியே வந்த பின்னர் மறுபடியும் சந்தித்து அமர்க்கப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 8ல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 பேர் இருக்கிறார்கள். உள்ளே டிக்கெட் டூ பின்னாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் அதில் இருந்து கடந்த வாரங்களில் எலிமினேஷன் ஆகி வெளியான ஜெப்ரி, அன்ஷிதா, சத்யா, ஆனந்தி ஆகியோர் மீண்டும் சந்தித்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஆடி பாடி குளியல் தொட்டியில் 4 பேரும் அமர்க்களம் படுத்துகின்றனர். இவர்களுடன் சத்தியாவின் மனைவியும் கலந்துகொண்டது வைப் செய்கிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் "உள்ளே இந்த மாதிரி ஏன் ஒத்துமையா இல்லை, அங்க ஒன்னும் செய்யாம இங்க வந்து பன் பண்ணுறாங்க" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Listen News!