• Oct 09 2024

சீதாவை உயிரோடு புதைக்கும் ரவுடிகள்! முத்தாரம்மனிடம் கதறியழும் ராம்.. இனி நடக்கப்போவது என்ன?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்களுக்கு என்று ஒரு தனித்துவமான இடமுண்டு. அந்த  வரிசையில் சீதா ராம் சீரியலும் காணப்படுகிறது. அதன்படி, விறுவிறுப்பாக நகரும் சீதா ராம் சீரியலின் இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க..


சீதா ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த நிலையில் இன்று ரவுடிகள் அவர் தலையில் செங்கலை எடுத்து அடித்து கீழே சரிய வைக்கின்றனர்.  மறுபக்கம் அஞ்சலி சத்யா மற்றும் பிரியா என மூவரும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வர மீரா இவங்க தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று சொல்ல சத்தியனும் சப்போர்ட் செய்து பேசுகிறான்.


பிறகு இவர்களை போலீசை வைத்து தான் விசாரிக்க வேண்டும் என சொல்லிவிட்டு ராம் ரூமுக்குள் சென்று அதை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறான். இங்கே ரவுடிகள் சீதாவை இப்படியே விடுவது நல்லது இல்லை என உயிரோடு புதைத்து விட திட்டம் போடுகின்றனர்.  


இங்கே ராம் ரூமில் முத்தாரம்மன் போட்டோவை வைத்துக் கொண்டு சீதாவை நினைத்து கலங்கி துடிக்க மறுபக்கம் ரவுடிகள் சீதாவை ஒரு சிமெண்ட் தொட்டிக்குள் வைத்து புதைக்க முயன்று வருகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் ப்ரோமோ நிறைவு பெற்றது.

எனவே, பொறுத்து இருந்து பார்ப்போம். ராம் சீதாவை காப்பாறுவாரா என...


Advertisement