தென்னிந்தியாவின் மூத்த நடிகையும், சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் முதல் கதாநாயகியுமான காமினி கௌஷல் தனது 98 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் செய்தியை அறிந்த பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
காமினி கௌஷல் தனது திரையுலக்க வாழ்க்கையில் சுமார் 90 படங்களில் நடித்துள்ளார். இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான படத்தில் அமீர்கான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் காமினி கௌஷலுக்கு மூன்று மகன்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தற்போது காமினி கௌஷல் உயிரிழந்த செய்தி பலருக்கும் மீள முடியாத வேதனையை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .
Listen News!