சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார். தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர், திருமணத்திற்குப் பிறகு ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
தமிழ் சினிமாவில் தனுஷுடன் இணைந்து மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்பு எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம், மனிதன், வாலு, வேலாயுதம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இதை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தனது நண்பரான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அரண்மனை ஒன்றில் பிரம்மாண்டமாக நடந்தது. ஆனாலும் தற்போது அவர்கள் பிரிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கவில்லை என்றும், அவர் தனது அம்மாவுடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இணையத்தில் செய்தி பரவி வருகிறது. அதே போல அவருடைய கணவரும் அவருடைய தாயார் வீட்டில் வசித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் கருப்பு உடையில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் ஹன்சிகா காணப்படுகின்றார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Listen News!