பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டாவின் குடும்பச்சண்டை சின்னத்திரையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
இதை தொடர்ந்து ஜாய் ஆண் குழந்தையை பிரசவித்த நிலையில், அதற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, அதில் தான் அப்பா என்று நிரூபித்தால் மட்டுமே அந்த குழந்தைக்கான பொறுப்பை ஏற்பேன் என்று ரங்கராஜ் டிமாண்ட் வைத்துள்ளார்.
எனினும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதாக சொல்லிவிட்டு எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று தொடர்ச்சியாக அவரை தாக்கி வருகிறார் ஜாய். மேலும் பிறந்த குழந்தையின் பெயரில் இன்ஸ்டா ஐடி ஒன்றை ஓபன் பண்ணி அதிலும் ரங்கராஜை தாக்கி வருகிறார்.

முதலில், மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில், ரங்கராஜ் இரண்டாவது திருமணத்தை ஒப்புக்கொண்டதாகவும், குழந்தையை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை ரங்கராஜ் மறுத்தார். என்னை மிரட்டி தான் திருமணம் நடந்தது என்றார். இவ்வாறான நிலையிலேயே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ளார். அதில் தான் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் போது மாதம்பட்டி ரங்கராஜ் இது என்னுடைய குழந்தை, அதற்கான பொறுப்பை நான் ஏற்பேன் என்று அவர் அனுப்பிய மெசேஜை பப்ளிக் ஆகியுள்ளார்.
எனவே இதற்கு ரங்கராஜின் பதிலடி எப்படி இருக்கப் போகின்றது? அவர் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு செல்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Listen News!