• Jan 18 2025

ஒரே ஒரு பட்டனை அழுத்த ஓடோடி வந்த தவெக தலைவர்! பின்னாடியே குவியுமா பேன்ஸ் கூட்டம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்படி தற்போது வரையில் நடிகர் அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சசிகுமார், குஷ்பு குடும்பம், சிவகார்த்திகேயன், கார்த்திக், பிரபு என பல்வேறு சினிமா நட்சத்திரங்களும் தமது  வாக்கை செலுத்தியுள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

ஆனாலும், பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் வாக்கு செலுத்த வரவில்லை. அவர்   வருவாரா?  இல்லையா? என்ற பரபரப்பான செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன.


இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது சென்னைக்கு  திரும்பியதாகவும் தனது சிகப்பு நிற காரில் வாக்குப்பதிவு செய்ய கிளம்பி உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளன.


அத்துடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், எமது இலக்கு 2024 அல்ல 2026 என்று கூறியிருந்தார். அதன்படியே இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டி போடுவதற்காக இப்போது இருந்தே தயாராகி வருகிறது தமிழக வெற்றிக்கழகம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement