• Dec 02 2024

முதல்முறையாக மகளுக்கு நீச்சல் டிரஸ் போட்டு அழகு பார்த்த நடிகை.. இப்பவே இப்படின்னா இனி எப்படியோ?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஒருவர் தனது மகளுக்கு நீச்சல் டிரஸ் போட்டு அழகு பார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு ’வனமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதன் பிறகு ’கடைக்குட்டி சிங்கம்’ ’ஜூங்கா’ ’கஜினிகாந்த்’ ’காப்பான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்

 திருமணத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகிவிட்ட சாயிஷா ’பத்து தல’ படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த நிலையில் நடிகை சாயிஷா இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது மகளின் அழகான புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தனது மூன்று வயது மகளுக்கு நீச்சல் உடை உடுத்தி நீச்சல் குளத்தில் நீச்சல் கற்று கொடுக்க உள்ளதாக சாயிஷா தெரிவித்துள்ளார். அவர் நீச்சல் குளம் அருகே நீச்சல் உடையில் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’எனது மகளுக்கு முதல் முதலாக நீச்சல் குளத்தை காண்பிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த சின்ன வயதிலேயே அத்தியாவசியமான பயிற்சிகளில் ஒன்றாகிய நீச்சல் பயிற்சியை தனது மகளுக்கு கற்றுக்கொடுக்கும் பொறுப்பான அம்மாவாக சாயிஷாவை இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் மூன்று வயதிலேயே நீச்சல் உடை போட்டு அழகு பார்க்கும் சாயிஷா மகள் வளர்ந்த பின் என்ன செய்ய காத்திருக்கின்றாரோ என்று நெகட்டிவ்வாகவும் ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் சாயிஷா பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement