தமிழ் சினிமாவில் நேற்று வெளியான திரைப்படங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படமாக வைபவ் நடிப்பில் வெளிவந்த ‘பெருசு’ படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஒரு மாஸ் ஆக்சன் மற்றும் திரில்லராக உருவாகியுள்ளதால், ரசிகர்களின் மனங்களைப் இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் இளங்கோ ராமநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் வைபவ் முந்தைய படங்களை விட மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெருசு திரைப்படம் திரையரங்குகளுக்கு வெளியான முதல் நாளிளே ரூ.50 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு நல்ல தொடக்கமாகவே படக்குழு கருதப்படுகின்றது.
அத்துடன் வைபவ் தற்போது அவரின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் நடிகராக வளர்ந்து வருகிறார். அந்தவகையில் ‘பெருசு’ படம் அவருக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் என்றே சிலர் கூறுகின்றனர். தமிழில் ஒரே நாளில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும் ‘பெருசு’ படம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் இனிவரும் காலங்களில் படம் அதிகளவு வசூலினைப் பெறும் எனவும் படக்குழு எதிர்பார்க்கின்றனர்.
Listen News!