• Mar 15 2025

மஞ்சள் சேலையில் ஸ்டைலாக மிளிரும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! ரெண்டாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையான ஆடைகளில் தோன்றும் ஐஸ்வர்யா, தனது நடிப்புத்திறன் மூலம் ரசிகர்களிடம் அதிகளவு மதிப்பைப் பெற்றவர். காக்கா முட்டை , தர்மதுரை மற்றும் கனா போன்ற படங்களில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்திய இவர், தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இந்த புகைப்படங்களில் மஞ்சள் நிறஅழகிய சேலையில் எளிமையான தோற்றத்துடன் ஜொலிக்கிறார். அதில் அவருடைய சிரிப்பு மற்றும் பாரம்பரிய உடை என்பன ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.


சினிமா உலகில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சாதாரண கேரக்டர்களில் கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கின்ற வகையில் நடிப்பவர். அந்தவகையில் தற்பொழுது வெளியான புகைப்படங்களில் அவர் அணிந்துள்ள பாரம்பரிய உடைகள் அவருக்கு மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், தாய்மையின் முகவரியாக தமிழ் பெண்களுக்கு சேலை தான் அழகு எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். இவ்வாறு இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் இந்த புகைப்படங்கள் பாரம்பரிய தமிழ் பெண்களின் அழகைக் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.



Advertisement

Advertisement