• Jan 19 2025

ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த இந்தியன் தாத்தா.. முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நேற்றைய தினம் உலக அளவில் வெளியானது.

கடந்த நான்கு, ஐந்து வருடங்கள் ஆகவே இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு சிக்கல்களால் தடைபட்டு வந்த நிலையில், தற்போது பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இதற்கு கலவையான  விமர்சனங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் முதலாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது.


அதன்படி, இந்த படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 60 கோடிக்கு மேல் என கூறப்படுகின்றது.

இந்தியன் 2 படத்தின் முன்பதிவுகள் கூட தாறுமாறாக இடம்பெற்று வந்த நிலையில், முதல் நாளில் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது இந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement