• Jan 19 2025

எல்லாத்தையும் சோஷியல் மீடியாவில் போடுவேன்.. பிக்பாஸ் ரச்சிதாவை மிரட்டிய தயாரிப்பாளர்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவில் போடுவேன் என பிக் பாஸ் ரச்சிதாவை மிரட்டும் வகையில் தயாரிப்பாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் ஜேஎஸ்கே சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஃபயர்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த சில சர்ச்சைக்குரிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக ரச்சிதா மகாலட்சுமி பிறந்தநாள் அன்று இந்த படத்தின் வீடியோ ஒன்று வெளியான நிலையில் அந்த வீடியோவில் ரச்சிதா மிகவும் கிளாமராக நடித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .

இந்த நிலையில் ரச்சிதா தனது சமூக வலைத்தளத்தில் ’நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருக்கலாம், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வேண்டாம், தன்வினை தன்னைச் சுடும்’ என்று பதிவு செய்திருந்தார்.



இந்த பதிவுக்கு இயக்குனர் சதீஷ் ’நீங்கள் நடித்த காட்சியை தான் உங்கள் பிறந்தநாளுக்கு வீடியோவாக பதிவு செய்தேன், நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி செய்யவில்லை, படம் வெளியாகும் போது நீங்கள் நடித்த இன்னும் சில காட்சிகள் வெளியே வரும், நீங்கள் ஒன்றும் இனாமாக நடிக்கவில்லை, சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்திருக்கிறீர்கள், அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது’ என்று கூறினார்.

மேலும் ’இந்த படத்தில் நடித்ததை நீங்கள் ஷிட் என்று தெரிவித்துள்ளீர்கள், அந்த ஷிட்டில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் , உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம், தேவைப்பட்டால் இந்த படத்தில் நடித்த எல்லா காட்சியையும் சோஷியல் மீடியாவில் போடுகிற மாதிரி வரும்' என்று கூறியுள்ளார். இந்த பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement

Advertisement