• Sep 09 2024

ராதிகாவை வீட்டைவிட்டு துரத்தியடித்த கோபி.. கமலா செய்த காரியம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகாவும் கமலாவும் வீட்டில் இருக்க, குடித்துவிட்டு வந்த கோபி அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு போகுமாறு தகராறு பண்ணுகிறார். ஆனால் அந்த நேரத்தில் மையூ வரவும் மையூ என் பிள்ளை அதனால் அவள் மட்டும் இருக்கட்டும். நீங்க எல்லாம் வீட்டை விட்டு வெளியே கிளம்புங்க என சொல்ல, நீங்க சொன்னா நாங்க போகணுமா என கமலா திமிராக உள்ளே செல்கிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லாரும் சாமி கும்பிட்டு விட்டு கோர்ட்டுக்கு செல்ல தயாராகின்றார்கள். ஆனாலும் ராமமூர்த்தி தான் வரவில்லை என சொல்லவும், இல்ல நீங்க இன்டைக்கு  கட்டாயம் வந்து தான் ஆக வேண்டும் என பாக்கியா சொல்கின்றார். வேற வழி இல்லாமல் ராமமூர்த்தியும் ரெடி ஆகின்றார்.

அந்த நேரத்தில் பாக்கியா தனக்கு ரெஸ்டாரண்டில் ஒரு அலுவல் இருப்பதாக சொல்லி செல்ல, அதை நாங்கள் பார்த்துக் கொள்ளுறோம். என்ன விஷயம் என செல்வி கேட்கவும், இல்லை நான் பார்த்துவிட்டு கோர்ட்டுக்கு செல்கிறேன் என பாக்கியா கிளம்பி செல்கிறார்.


மறுபக்கம் கமலா கோர்ட்டுக்கு கிளம்ப, ராதிகா தான் வரவில்லை என சொல்லுகிறார். மேலும் அத்தையை வீட்டை விட்டு வெளியே துரத்தியது மட்டும் சரி இப்ப நடக்கிறது எல்லாம் எனக்கு சரியா படல என சொல்லவும், ராதிகாவின் மண்டையை கழுவி அவரையும் கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறார் கமலா.

கோர்ட் வாசலில் எழில், செழியன், ராமமூர்த்தி நிற்க, அங்கு கோபியும் வருகின்றார். அவரைப் பார்த்ததும் ராம மூர்த்தி ஆத்திரப்பட்டு அவனை கொலை பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போவேன் என சொல்லுகிறார். அந்த நேரத்தில் செல்வியும் வீட்டில்  இருக்க முடியாமல் வந்து விடுகிறார். மேலும் பாக்கியா இன்னும் வரவில்லை என விசாரிக்க, அம்மா சரியான நேரத்துக்கு வந்து விடுவாங்க என எழில் சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement