• Sep 07 2024

பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு... வெளியான முழு விபரம்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஒட்டுமொத்த ரசிகர்கள் கொண்டதும் ஒரு நடிகர். மாஸான நடை, ஸ்டைல், பஞ்ச் வசனம் என நிறைய விஷயங்கள் மூலம் இப்போதும் மக்களை கவர்ந்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் அதிரடி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது. இப்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படம் தயாராகி வருகிறது.


மாஸ் நடிகராக 4 தசாப்தங்களாக நடிக்கும் ரஜினியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 430 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்துக்கு ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னையில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு உள்ளது.


இவர் ஒரு ஆடம்பரமான திருமண மண்டபம் வைத்துள்ளார், அதன் பெயர் ராகவேந்திரா மண்டபம். 1000க்கும் மேற்பட்டோர் அமரவைக்கும் வகையில் உள்ள இந்த மண்டபத்தின் மதிப்பு ரூ. 20 கோடி என கூறப்படுகிறது. கோஸ்ட் மற்றும் பேண்டம் என விலையுயர்ந்த இரண்டு ரோல்ஸ் ராயஸ் கார்கள் உள்ளன.


டொயோட்டா இன்னோவா, ஹோண்டா சிவிக், பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன், லம்போர்கினி உருஸ் மற்றும் பென்ட்லி போன்ற கார்களும் வைத்துள்ளார். இவ்வளவு சொத்து வைத்திருப்பவர் நிறைய ரசிகர்களையும் சேர்த்து வைத்துள்ளார்.  

Advertisement

Advertisement