• Sep 07 2024

நாக சைதன்யா, சோபிதா திருமணம்... எப்போது தெரியுமா? இதுமட்டும் செய்யவேண்டாம் ரசிகர்கள் கோரிக்கை...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து காதலித்து வருகிறார்கள். அந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டினார்கள். இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி ரொம்ப நல்ல நாள். அதை விட்டுவிடக் கூடாது என அன்றே திடீரென்று நிச்சயதார்தத்தை எளிதாக நடத்தி முடித்தார்கள். நிச்சயம் நடந்துவிட்டாலும் திருமண தேதியை இன்னும் குறிக்கவில்லை என நாக சைதன்யாவின் தந்தையான நடிகர் நாகர்ஜுனா தெரிவித்தார்.


இந்நிலையில் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்கிறார்கள். அதே சமயம் இந்த ஆண்டின் இறுதியிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. திருமண தேதி இது தான் என நாகர்ஜுனா அறிவிப்பு வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் டெஸ்டினேஷன் வெட்டிங்காக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதை பார்த்த ரசிகர்கள் பதறிவிட்டார்கள். அய்யய்யோ டெஸ்டினேஷன் வெட்டிங் எல்லாம் வேண்டாம் நாக சைதன்யா. பேசாமல் ஹைதராபாத்திலேயே திருமணத்தை நடத்துங்கள்.


முன்னதாக உங்களுக்கும், சமந்தாவுக்கும் கோவாவில் டெஸ்டினேஷன் வெட்டிங் நடந்தது. அந்த திருமணம் 4 ஆண்டுகளில் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதனால் மீண்டும் டெஸ்டினேஷன் வெட்டிங்கை தேர்வு செய்வது நல்லது இல்லை. அது உங்களுக்கு சரிபட்டு வராது என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சோபிதா, நாக சைதன்யாவின் திருமண வாழ்க்கை 2027ம் ஆண்டில் முடிந்துவிடும் என ஜோதிடர் வேணுசாமி தெரிவித்துள்ளார். அப்பா நாகர்ஜுனாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணம் தான் நிலைத்தது. அதே போன்று நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணமும் கடைசி வரை நிலைக்கும் என பேசப்படுகிறது.


Advertisement

Advertisement