• May 19 2024

KGF 3 திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு- இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் KGF 2. இப்படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

மேலும் இப்படம் உலகமுழுவதும் ரூ.1200 கோடியளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது, ஒரு கன்னட திரைப்படம் இவ்வளவு பெரிய வசூலை வாரிக்குவிப்பது இதுவே முதல்முறை.

அப்படியான இமாலய வெற்றியை பெற்றுள்ள KGF படத்தின் மூன்றாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி KGF 3 படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகின்றது.

மேலும் KGF 3 படத்தை 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு. இப்படத்தின் தயாரிப்பாளர் MARVEL Universe போல வெவ்வேறு படங்களின் கதாபாத்திரங்களை அப்படத்தில் கொண்டு வர முயற்சி செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/9JOK7RzxYes
  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement