• Jul 27 2024

’ஆடுஜீவிதம்’ வெற்றியை அடுத்து அமலாபால் அடுத்த படம்.. டெலிவரிக்கு முன் ரிலீஸா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜுடன் அமலாபால் நடித்த ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அமலாபால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’த்ரிஷ்யம்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிடும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை அர்பாஸ் அயூப் என்பவர் இயக்கி உள்ளார்.

பிரபல தமிழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஜீத்து ஜோசப் 4 மொழிகளில் வெளியிடுகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அமலாபால், சைதாலி என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக புதிய போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் நிலையில் அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பிறக்கும் முன்பே ’லெவல் கிராஸிங்’ படம் வெளியாகுமா அல்லது அதற்கு பின்னர் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகை அமலா பால் கர்ப்பிணி ஆக இருந்தாலும் ’ஆடு ஜீவிதம்’ படம் போலவே ’லெவல் கிராஸிங்’ படத்திற்கு ப்ரமோஷனுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement