• May 18 2025

பெட்டியுடன் நடையை கட்டிய ஈஸ்வரிக்கு பாக்கியா கொடுத்த அதிர்ச்சி! வெளியான ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

இன்றைய எபிசோடில், கோபி வீட்டை விட்டு வெளியேற நினைத்தது மட்டுமில்லாமல், ஈஸ்வரியிடம் தன்னுடன் வருமாறும் இல்லையென்றால் தான் தவறான முடிவு எடுத்துடுவேன் என்றும் எமோஷனலாக அழுது பேசுகிறார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், கோபியும் ராதிகாவும் பெட்டியை எடுத்துக் கொண்டு வர, தன்னுடன் அம்மாவும் வருவதாக கோபி வீட்டாரிடம் சொல்லுகிறார். ஈஸ்வரியும் கையில் பெட்டியுடன் வருகிறார்.


இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைய இனியா பாக்கியாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுகிறார். இதனால் பாக்கியா அங்கு வரும் போது மூவரும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இதன்போது நான் என் பிள்ளை கூட இருக்கனும் என்று சொல்ல, நான் எதுவுமே சொல்ல இல்லையே என்று பாக்கியா சொல்லுகிறார். இதைக் கேட்ட ஈஷ்வரி அப்போ நான் எப்ப வீட்டை விட்டு போவேன் என்று இருந்தியா என்று கோபத்துடன் பேசி கோபியுடன் செல்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement