50வது நிறைவு நாளைக் கொண்டாடிய RRR திரைப்பட படக்குழுவினர்-இணையத்தில் வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர்களில் முக்கியமானவர் தான் ராஜமௌலி. பாகுபலி படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிய திரைப்படம் தான் RRR.

இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியாபட் சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் கதை, பாடல்கள் என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன. அதே போல ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரின் நடிப்பும் வேற லெவலில் இருந்தது.

ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த மார்ச் 24ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆன நாள் முதல் இதுவரை உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1, 132 கோடி வரை வசூலித்துள்ளதாம். தற்போது படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை RRR படக்குழுவே வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்