“எனது ஸ்டைலுக்கு விஜய்டிவி ஒத்துவராது அதனால் அந்த பக்கமே வரமாட்டேன்“- பிரபல தொகுப்பாளினி

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடிய பல தொகுப்பாளர்கள் காணப்படுகின்றனர். அந்த வரிசையில் இப்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் தற்போதைய பிரபல தொகுப்பாளர்களாக உள்ளார்கள்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி படு சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியது.

அதில் சிவகார்ததிகேயனை பாவனாவை கலாய்ப்பதும், ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை ஓட்டுவதும் மிகவும் கலகலப்பாக இருக்கும்.இதனைத் தொடர்ந்து விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இது தவிர பாவனா இப்போது கலர்ஸ் தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அவரிடம் ஒரு ரசிகர் விஜய் டிவி எப்போது வருவீர்கள் என கேட்க அதற்கு அவர், இனி விஜய் பக்கம் வரப்போவதில்லை, அவர்களின் ஸ்டைல் இப்போது மாறியுள்ளது. காமெடியாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்ல அவர்கள் இப்போது வழக்கமாக வைத்துள்ளார்கள். அது எனது ஸ்டைலுக்கு மாறாக உள்ளது என கூறியுள்ளார்.

  • சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்