டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?-செம குஷியான ரசிகர்கள்

அட்லியின் துணை இயக்குநராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் டான். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்திருந்தார். அதே போல வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ். ஜே சூர்யா நடித்திருந்தார்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அத்தோடு பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படத்திற்கான அடுத்தடுத்த நாட்களின் டிக்கெட் புக்கிங் அமோகமாக நடக்கிறது.ரசிகர்கள் டான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுக்க முதல் நாள் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

வரும் நாட்களில் படத்திற்கான வசூல் அதிகமாகும் என்று கூறுகின்றனர். மேலும் இது தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்