• Jul 27 2024

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா மற்றும் ஏ ஆர் ரகுமான் காம்போ கேக் வெட்டி கொண்டாட்டம்.

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

Behindwoods நிறுவனர் மற்றும் CEO மனோஜ் NS எழுதி, தயாரித்து, இயக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடனப்புயல் பிரபுதேவா.பெயர் குறிப்பிடாது கடந்த மார்ச் 22 அன்று, பிரபுதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின்  பெஸ்ட் லுக்  போஸ்டரைப் பகிர்ந்து கொண்டார். 


#ARRPD6 என சமூக வலைதளங்களில் அறியப்பட்ட இத்திரைப்படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  பிரபுதேவா தவிர யோகி பாபு, அஜு வர்கீஸ், சாட்ஸ், அர்ஜுன் அசோகன், நிஷ்மா செங்கப்பா, சிங்கம்புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், டிஎஸ்ஆர் சீனிவாசன், ராமர், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், ரெடின் கிங்ஸ்லி, சுஷ்மிதா நாயக், ராஜேந்திரன், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் என நடிகர் வரிசை நீள்கிறது.மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் படத்திற்கான முதலாம்  கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பகிரப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.இப் புகைப்படத்தில் பிரபுதேவா,இயக்குனர் மனோஜ், ஜூனியர் ஆர்ட்டிக்ஸ் மற்றும் டெக்க்னீசியன்கள் மற்றும்  யூ டீயுப் பிரபலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement