• Jan 19 2025

SK 23 இன் புது அப்டேட் .சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக அரண்மனை புகழ் சஞ்சய்.

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டங்களை வழங்க காத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி,ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், வெளிவரவிருக்கிறது  சிவகார்த்திகேனின் அமரன் திரைப்படம். 


இதற்கிடையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் இணைந்து  பணியாற்றும் SK 23 மிகப்பெரிய ஆக்‌ஷன் என்டர்டெய்னராக வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது . ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.


இந்நிலையில் அரண்மனை திரைப்படம் மூலம் புகழ் பெற்ற குழந்தை நட்ஷத்திரமான சஞ்சய் சமீபத்தில் சானல் ஒன்றிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது SK 23 யில் சிவகார்த்திகேயனின் இளைய சகோதரனாக நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Advertisement

Advertisement