தமிழ் சினிமாவில் ரன், பீமா, பையா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இவர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பில் வெளியான போதும் ஏமாற்றத்தை தான் கொடுத்தது.
அதேபோல விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 திரைப்படம் இவர் இயக்கத்தில் வெளியானது. ஆனால் அந்தப் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது கவின் நடித்த படங்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் அவரை லுக் வைஸ்ல பார்க்கும் போது நல்லா இருக்காரு. ஒருவேளை பையா 2 பண்ணினா கட்டாயம் கவின் பொருத்தமா இருப்பாரு என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

அதாவது, நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பையா. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதன் இரண்டாம் பாகம் உருவாகுவதாகவும் அடிக்கடி தகவல்கள் கசிந்தவாறு இருந்தது.

தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக காணப்படும் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம், ஸ்டார் திரைப்படம் ஆகியவை விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கவினும் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறார்.
இவ்வாறான நிலையிலே இயக்குனர் லிங்குசாமி பையா 2 படம் எடுத்தால் அதற்கு கார்த்திக்கு பதிலாக கவின் பொருத்தமாக இருப்பார் என கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!