• Nov 14 2024

'ஆடு ஜீவிதம்' படத்தில் பிரித்விராஜ் நடித்தாரா? வாழ்ந்தாரா? முழு திரை விமர்சனம் இதோ..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள படம் தான் ஆடு ஜீவிதம்.  இந்த படம் இன்றைய தினம் மார்ச் 28ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனம் பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்தப் படத்தில் கதாநாயகனான பிரித்விராஜ், நஜீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு வெளிநாட்டில் வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற திட்டம் ஒன்று காணப்படுகிறது. இதனால் இவர் தன்னுடைய நண்பரின் மாமாவின் உதவியால் சவுதி அரேபியாவில் வேலைக்கு செல்கிறார். அங்கு உதவியாளர் வேலைக்காக தான் செல்கிறார். ஆனால் அங்கு போன பின்பு தான் ஹீரோவுக்கு பேரதிர்ச்சியே  காத்திருக்கிறது.

அதாவது சவுதி அரேபியாவில் கொத்தடிமை வேலைக்கு தான் தன்னை எடுத்திருப்பது என்பது பின்னர் தான் ஹீரோவுக்கு தெரிகிறது. இருந்தாலும் இந்த வேலைக்கு தான் வரவில்லை என்னை விட்டு விடுங்கள் என்று பிரித்விராஜ் கெஞ்சி அழுகிறார். ஆனாலும் அவர்கள் விடவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் பிரித்விராஜ் அங்கு பல கொடுமைகளை  அனுபவிக்கின்றார். பலமுறை தப்பிக்கவும் முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை. முதலாளியிடம் முறையாக மாட்டிக் கொள்கிறார்.

இவ்வாறு பல வருடங்கள் சவுதி அரேபியாவிலேயே பிரித்விராஜ் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் என்ன நடந்தது? பிரித்விராஜ் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.


ஆடுஜீவிதம் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்குனர் மிக அற்புதமாக கதையை எடுத்துக் காட்டியுள்ளார். வெளிநாட்டுக்குச் செல்லும் நபர் ஒருவர் அங்கு எப்படி எல்லாம் கொடுமைகளை அனுபவிக்கிறார் என்பதை சிறப்பாக காட்சிகள் மூலம் காட்டியுள்ளார் இயக்குநர்.

படத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்லலாம். கொத்தடிமை வாழ்க்கை, பாலை வனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகள், சொந்த மண்ணுக்கு திரும்ப நினைக்கும் உணர்வு பூர்வமான காட்சிகள் என எல்லாவற்றையும் சிறப்பாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.


அதைப் பார்க்கும்போது பார்வையாளர்களின் கண்ணில் கண்ணீர் வர வைத்து விடுகிறது. சொல்லப் போனால் இதுவரை இல்லாத அளவிற்கு அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பிரித்விராஜ்.

நடிகை அமலா பால் உடைய கதாபாத்திரத்திற்கு பெரிதளவில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஏ. ஆர் ரகுமானின் பின்னணி இசையும் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. அதை போல ஒளிப்பதிவு எடிட்டிங்கும் நன்றாக இருக்கின்றது. ஆனாலும் கதையின் வேகம் கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. இதனை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆக மொத்தத்தில் ஆடுஜீவிதம் படம் மிகவும் சிறப்பாக உள்ளது.

Advertisement

Advertisement