நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் இன்று தனது இரண்டு படங்களின் அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் அந்த இரண்டு படங்களையும் தன்னுடைய ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து அவரது அறிவிப்புக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது என்பதும் குறிப்பாக அவர் அறிவிக்கும் படங்களில் ஒன்றில் கேபிஒய் பாலா ஹீரோவாக நடிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த அறிவிப்பு வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இன்று உங்கள் இரண்டு படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசையோடு காத்திருந்தோம், இப்படி ஏமாற்றி விட்டீர்களே’ என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களின் முன்னோட்ட வீடியோ எடிட்டிங் பணிகள் தாமதம் ஆகிவிட்டதாகவும் அந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த வாரத்திற்குள் இந்த இரண்டு படங்களை அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த இரண்டு படங்களில் ஒன்று கேபிஒய் பாலா ஹீரோவாக நடிக்கும் படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த படத்தின் மூலம் ஒரு புதிய ஹீரோ தமிழ் திரை உலகத்திற்கு கிடைக்க உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
Hi friends and fans
As I announced yesterday, there were supposed to be 2 movies under Ragavendra Production, but unfortunately, due to some making of glimpse technical issues, it's announced in few days
Listen News!