• Nov 22 2024

"கருப்பு எம். ஜி. ஆர்." ற்கு பத்மபூஷன் விருது; ரஜனிகாந்த் பெருமிதம்.

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!


அறிமுகம் தேவையற்ற முகங்களில் சில முதன்மையில் இருக்கும் அந்த வரிசையில் வருபவரே கேப்டன் விஜயகாந்த்.தமிழ் திரையுலகில்  நான்கு தசாப்தங்கள் கடந்து நடித்த  இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துள்ளார்.அத்துடன் அரசியல் களத்தில் அனைவருக்காகவும் சிந்திக்கும் ஒரு பெரும் தலைவராக உயர்ந்து நின்றார்.கடந்த ஆண்டு உடல் நலக் குறைவால் 28 டிசெம்பர் 2023 இல் இவ்வுலகை நீத்தார் விஜயகாந்த்.அவரது இறுதி ஊர்வலத்தில் ரசிகர்களும் தொண்டர்களும் இலச்சகணக்கில் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பத்ம விருதுகளில் 2024-ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக விஜயகாந்த்திற்கு அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு அறிவிக்கப்பட்டு கடந்த மே 10 ஆம் திகதி  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவாலால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் வழங்கப்பட்டது.


இது குறித்து காணொளி ஒன்றின் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.அவரை போல் ஒரு மனிதனை எப்போதும் காண முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement