• Jan 19 2025

முகத்தை சுர்ரென வைத்துக் கொண்டு கிளம்பிய திரிஷா! விமான நிலையத்தில் என்னாச்சு?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக காணப்படும் நடிகை திரிஷா, விஜய்யுடன் லியோ படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

அண்மையில் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி பேசியதும் உச்சக்கட்ட கோபத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து கூவத்தூர் விவகாரத்திலும் த்ரிஷாவின் பெயர் அடிபட்டது.

தற்போது பாடகியாக காணப்படும் சுசித்ரா நடிகர் தனுஷ், அண்ட்ரியா, திரிஷா, அனிருத் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றியும் வறுத்தெடுத்து வருகின்றார். 

அதில் நடிகை திரிஷா தான் சுச்சி லீக்ஸ் என்ற இணையதளத்தில் வெளியான புகைப்படங்கள் எல்லாவற்றையும் தந்தாக  குண்டொன்றையும் தூக்கி போட்டுள்ளார். இந்த விஷயத்திலும் நேரடியாக அவருக்கு பதில் கொடுக்காமல் மறைமுகமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருந்தார் திரிஷா.


இந்த நிலையில், பாடகி சுசித்ரா வெளியிட்ட தகவல்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விமான நிலையத்திலிருந்து வெளியேறிய திரிஷா, பேட்டியெடுத்த செய்தியாளர்களிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதாவது நடிகை திரிஷா விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் போது கில்லி ரீ ரிலீஸ் வெற்றி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார் நடிகர் திரிஷா.


Advertisement

Advertisement