• May 18 2025

நகையை எடை போட்டு பார்க்க சொல்லும் குயிலி.. திடீரென மயக்கமடைந்த தங்கமயில்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் சரவணன் - தங்கமயில் திருமணம் நடைபெறும் காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் அதை தங்கமயில் குடும்பத்தினர் எப்படி சமாளிக்கின்றனர் என்பதையும் அடுத்தடுத்த எபிசோடுகள் தான் பார்க்க முடியும்.

குறிப்பாக 80 பவுன் நகை போடுகிறேன் என்று சொல்லி உள்ள பாக்கியம் கிட்டத்தட்ட அனைத்தையும் கவரிங் நகையை தான் செய்து உள்ளார். இந்த உண்மை  மட்டும் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்தால் பெரிய கலவரமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள முன்னோட்ட  வீடியோவில் கல்யாணத்திற்கு நாங்கள் தருவதாக கூறிய பணம் இதோ என்று தங்கமயில் அப்பா கொடுக்க அப்போது குயிலி கல்யாணத்திற்கு இன்னும் எவ்வளவு எவ்வளவு செலவாகும் என்று தெரியாது, அதற்குள் கொடுத்தால் எப்படி என்று கேட்க  அப்போது பாக்கியம் உறவினர் ’அதுதான் சொன்னதை விட அதிகமாக நகை போட்டு இருக்கிறார்களே, பணத்தை ஏன் அளந்து பார்க்கிறீர்கள் வேண்டுமென்றால் நகையை எடை போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.



அப்போது பாண்டியன் ’அதெல்லாம் வேண்டாம்’ என்று கூற குயிலி ’எடை போட்டு பார்த்துவிடலாம், எங்க அண்ணனுக்கு எவ்வளவு நகை வந்து இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிய வேண்டாமா’ என்று கூற, உடனே பாக்கியம் உறவினர் அந்த தராசை எடுத்து வாருங்கள் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் திடீரென தங்கமயில் மயக்கம் போட்டு விழ அவர் உண்மையிலேயே மயக்கம் போட்டு விழுந்தாரா? அல்லது சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நடிப்பா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement