• Jan 18 2025

ஜி.வி பிரகாஷை மிஞ்சிய பாரதிராஜா.. ‘கள்வன்’ படத்தின் முழு விமர்சனம் இதோ..

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளர், நடிகர் என வேறு பரிமாணங்களிலும் தனது திறமைகளை காட்டி வருகின்றார் ஜிவி பிரகாஷ்.  

பிவி சங்கர் இயக்கத்தில் தீனா, பாரதிராஜா ,இவானா ஆகியோருடன் ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்துள்ள படம் தான் 'கள்வன்'. இந்த படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா நடிப்பில், பிவி சங்கர் இயக்கத்தில் வெளியான 'கள்வன்' திரைப்படத்தின் விமர்சனத்தை விரிவாக பார்ப்போம். அதன்படி,

மலை கிராமத்தை சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் குமாரும், அவரது நண்பர் தீனாவும் திருட்டு வேலை செய்து வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் வசிக்கும் கிராமத்தில் யானை மிதித்ததில் சிலர் இறந்து விடுகிறார்கள். இதை மையமாக வைத்தே இந்த கதை நகர்கிறது. பொறுப்பில்லாத வாலிபர்களாக இருக்கும் ஜிவி பிரகாஷ், அந்த நேரத்தில் அங்கு வரும் இவானா இடையே காதல் ஏற்படுகிறது. அதன்பின் ஒரு பெண்ணின் காதலால் மாற்றம் அடைகிறார் ஜி.வி பிரகாஷ். 


ஆனாலும், ஜிவி பிரகாஷின் காதலை இவானா நிராகரிக்க அவரை விடாமல் துரத்தி அவருக்காகவே ஆதரவற்ற முதியோர் இல்லத்திலிருந்து பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் ஜிவி. காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜிவி பிரகாஷ் தத்தெடுக்கிறார் என்று அவரது நண்பர்கள் நினைக்கும் போது, அதற்கு பின்னணியில் வேறொரு திட்டம் காணப்படுகிறது. அந்த திட்டம் என்ன? அவரது திட்டமும் காதலும் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

இந்த படத்திற்கு பெரிய பக்கபலமாக இருந்தது பாரதிராஜா தான். தனது அபார நடிப்பினால் ரசிகர்களை ஈர்த்து விட்டார். பாரதிராஜாவை தொடர்ந்து நடிப்பில் கைதட்டர்களை வாங்கியுள்ளார் இவானா.


காதல், காமெடி, செண்டிமெண்ட், துரோகம் என அனைத்தும் கலந்து கலவையாகவும், சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் யானையை காட்டி அனைத்து தரப்பினரையும் 'கள்வன்' படம் ஈர்த்துள்ளது.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமாரின் தாத்தாவாக நடித்த பாரதிராஜா அனைவரையும் கண்கலக்க வைத்துள்ளார். இவானாவும் சிரித்த முகம் மற்றும் கோபமான முகம் என இரண்டையும் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். தீனா வரும் காட்சிகளும் அவ்வப்போது பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சிறப்பாக காணப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரேவாவின் பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளது. வனப்பகுதி, காடு மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது கள்வன் படம்.

Advertisement

Advertisement