• Sep 08 2024

விஜய்யை ஃபாலோ செய்யும் ‘ஸ்டார்’ நடிகர்.. கவின் மக்கள் இயக்கம் ஆரம்பமா?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

ஏற்கனவே அடுத்த தளபதி கவின் தான் என்று ஊடகங்கள் எழுதி உசுப்பேத்தி வரும் நிலையில் கவின் அதை நம்பி விஜய்யை பாலோ செய்ய இருப்பதாகவும் விரைவில் அவர் கவின் மக்கள் இயக்கம் என்ற ரசிகர் மன்ற இயக்கத்தை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் திரை உலக வாழ்வில் ஏற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதும் ‘லிப்ட்’ ‘டாடா’ மற்றும் ’ஸ்டார்’ ஆகிய மூன்று படங்களுமே வசூல் அளவில் வெற்றி படம் என்பதை அடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

தற்போது அவர் ’கிஸ்’, ‘பிளடி பெக்கர்’ மற்றும் ’மாஸ்க்’ ஆகிய 3 படங்களில் நடித்து வரும் நிலையில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கவின் தமிழ் திரை உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை அடுத்து திரையுலகில் இருந்து விலக இருப்பதால் அடுத்த தளபதி யார் என்ற போட்டி சிவகார்த்திகேயன் மற்றும் கவின் ஆகிய இருவரிடையே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கவின் அடுத்த தளபதி ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் கவின் அடுத்த கட்டமாக ரசிகர் மன்றம் தொடங்க இருப்பதாகவும் அதன் மூலம் பொதுமக்களுக்கு நற்பணி செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் போலவே கவின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக விஜய் போலவே கவின் அரசியலுக்கும் செல்வாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement