• Jan 19 2025

முதல் நாளே ராதிகா வீட்டில் அசிங்கப்பட்ட ஈஸ்வரி... செழியன் கொடுத்த கிப்ட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கோபி ஈஸ்வரியை ராதிகா வீட்டுக்கு கூட்டி வர கமலா அதிர்ச்சி அடைகிறார். கமலாவும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்கின்றார்கள். பிறகு ராதிகாவை கிச்சனில் கூட்டிப் போன கமலா, ஈஸ்வரி எதற்கு வந்தார் என விசாரிக்க, ராதிகா நடந்தவற்றை எல்லாம் சொல்லுகிறார். அதற்கு கமலா, எனக்கு அவ வந்தது சுத்தமா பிடிக்கல எப்படி ஓட விடுகிறேன் என்று மட்டும் பாரு என்ன சொல்லுகிறார்.

மறுபக்கம் கோபி ஈஸ்வரியிடம் இதுவும் உங்க வீடு தான் நீங்க மகாராணி மாதிரி இருக்கலாம் எந்த பிரச்சினையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல, ராதிகாட அம்மாவுக்கு நான் வந்தது பிடிக்கல என்னை பார்த்ததும் மூஞ்சி காத்து போன பலூன் மாதிரி போயிட்டு என்று ஈஸ்வரி சொல்ல, அப்படி எல்லாம் இல்லை உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என்று கோபி சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, இனியா பாட்டியால அங்கு ஒரு நாள் கூட இருக்க முடியாது. அங்க ஒழுங்கான ரூம் கிடையாது. அந்த அம்மாவுடைய சாப்பாடு நல்லா இருக்காது. பாட்டி கிளம்பி வந்துடுவாங்க என்று சொல்ல, விடு டா அவருக்கு அங்க இருந்து சரி புத்தி வரட்டும் அதுவரைக்கும் நான் சந்தோஷமா இருக்கேன் என்று ராமமூர்த்தி சொல்லுகிறார்.


இதை அடுத்து கோபி ராதிகாவிடம் அம்மாவுக்கு எல்லாம்  செய்து தர வேண்டும் என்று சொல்ல, மொட்டை மாடியில் ஒரு ரூம் போடலாமா என்று ராதிகா கேட்கிறார். அதற்கு அம்மாக்கு மூட்டு வலி இருக்கு அதனால மாடி ஏற முடியாது என்று சொல்லுகிறார். அதற்கு ராதிகா லிப்ட் வைப்போம் என்று சொல்ல,  இது நல்ல ஐடியா என்ற கோபி சொல்ல, நாம இருக்கிறது பிளாட் என்று ஞாபகப்படுத்துகிறார் ராதிகா.

இதை தொடர்ந்து ஈஸ்வரி ஹோலில் இருந்து கொண்டு எனக்கு தண்ணி வேண்டும் என்று கேட்க, கமலா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். திரும்பத் திரும்ப கேட்கவும் அவர் கண்டு கொள்ளவில்லை. பிறகு கிச்சனுக்கு போய் ராதிகா எங்க என கேட்க, அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறார் என்று கமலா சொல்லுகிறார்.

மேலும், உங்களுக்கு தண்ணி வேணும் என்டா நீங்க தான் வந்து எடுக்கணும். இது ஹோட்டல் இல்லை என்று சொல்ல,  பால் கேட்கிறார் ஈஸ்வரி. அங்கு கிண்ணத்தில் இருந்த பாலையும் கொட்டி விடுகிறார். வேற பால் இல்லையா என்று கேட்க, கமலா இல்லை என்கிறார். இதனால் ஈஸ்வரி கோபமாக வெளியே கிளம்ப, இதை யார் க்ளீன் பண்ணுவா என்று கேட்கிறார் கமலா. அதற்கு நீ பண்ணு இல்ல உன் பொண்ண கூப்பிட்டு பண்ண சொல்லு என்று ஈஸ்வரி வெளியே போகிறார்.

இதன்போது நீங்க வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல என்று கமலா சொல்ல, நான் கொஞ்ச நாள் இருக்கலாம் என்று வந்தேன் ஆனா இப்ப நீ இப்படி சொன்ன பிறகு நான் இனி இங்கதான் இருக்க போகிறேன் என்று கமலாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இறுதியாக செழியன் ஜெனிக்கு சாக்லேட் கிப்ட்டாக கொடுத்து இனி மாலினி பற்றி பேசாத, நான் கஷ்டப்பட்டாலும் பரவால்ல நீ அதை நினைச்சு கஷ்டப்படக்கூடாது. நான் உன்னை சந்தோஷமா வச்சுப்பேன் என்று மன்னிப்பு கேட்க, ஜெனி செழியனுக்கு ஆறுதல் சொல்லி சாரி கேட்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement