• Jan 18 2025

"அடர்ந்த காட்டுக்குள் பறவையாய் நுழைந்து வந்த அனுபவம் " கள்வன் படம் பார்த்து உருக்கமாக பேசும் வைரமுத்து

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருபவர் இசையமைப்பாளர் GV பிரகாஷ் ஆவார். இவர் தமிழ் சினிமாவுக்கு பல அருமையான பாடல்களை வழங்கியதோடு தற்போது தயாராகிக்கொண்டு இருக்கும் பான் இந்தியா திரைப்படங்களான தங்களாண் , ஷ்ரபிரா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகின்றார். 


இசையமைப்பதில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ரிபெல் திரைப்படம் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி டியர் மற்றும் கள்வன் போன்ற திரைப்படங்களும் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.


இந்த நிலையில் PV ஷங்கர் இயக்கத்தில் பாரதிராஜா ,இவனா ,தீணா இவர்களுடன் இணைந்து ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் திரைப்படத்தை ஸ்பெஷல் சோவில் கவிப்பேரரசு வைரமுத்து பார்த்துள்ளார். குறித்த படத்தை பார்த்த பிறகு அவர் தனது X தல பக்கத்தில் "  பாரதிராஜா , ஜி.வி.பிரகாஷ் , இவானா நடித்தகள்வன் படம் பார்த்தோம் அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய்  நுழைந்துவந்த அனுபவம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம்" என  பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement