• Jan 19 2025

மண்டபத்துல இருந்து பொண்ணை தூக்க பிளான்.. ராஜி-கதிரின் முதல் ரொமான்ஸ்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் குடும்பத்தினர் மண்டபம் செல்கின்றனர். மண்டபத்தில் சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள குமரவேல் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கல்யாணம் நடைபெற கூடாது, அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் செய்கிறார்கள்.

வெவ்வேறு பிளான்கள் செய்தபோது எதுவும் செட் ஆகாததை எடுத்து கடைசியாக பொண்ணை மண்டபத்தில் இருந்து இரவோடு இரவாக தூக்கி விடுவோம் என்று கூறுகிறார்கள். ஆமாம் எங்க வீட்டு பொண்ணை அவங்க தூக்கிட்டு போனாங்கல்ல, அதே மாதிரி அவங்க வீட்டு பொண்ணு நம்ம தூக்கிட்டு போகணும் என்று குமரவேல் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் இதற்கு பின்னால் நான் இருக்கிறேன் என்று தெரியக்கூடாது என்றும் குமரவேல் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குயிலுக்கு மீண்டும் சந்தேகம் வருகிறது, யாராவது பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக கல்யாண வீட்டில் வந்து கலாட்டா செய்வார்களா? என்று மீனாவிடம் கூறிய நிலையில் ஒருவேளை இரவோடு இரவாக வந்து பொண்ணை தூக்கி விட்டு சென்றால் என்ன செய்வது என்று கூறுகிறார். அதற்கு ராஜி  சொந்தக்காரர்கள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள் என்று கூறியதோடு தன்னுடைய சொந்தக்காரர்களையும் மீனாவின் சொந்தக்காரர்களையும் உதாரணமாக காட்டுகிறார்.



இந்நிலையில் சரவணன் - தங்கமயில் ஜோடியை விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பாண்டியன் உணர்ச்சி வசப்படுகிறார். அப்படியே நமது குடும்பத்தில் உள்ள எல்லோரையும் ஜோடி ஜோடியாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அப்போது எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்று கதிர் கூற, நீயே போஸ் கொடுத்து காமி என்று சரவணன் கூறுகிறார். இதனால் ராஜி வெட்கம், சங்கடப்பட இருவரும் வேறு வழியில்லாமல் போஸ் கொடுக்கின்றனர். அப்போது முதன்முதலாக கதிர் மற்றும் ராஜி இடையே ரொமான்ஸ் தோன்றும் காட்சியும் இன்றைய எபிசோடில் உள்ளது.

இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் பொண்ணை தூக்க பிளான் செய்த குமாரவேலின் திட்டம் பலிக்குமா? திருமணம் பிரச்சனை இல்லாமல் நடக்குமா? திருமணத்திற்கு வரும் பிரச்சனைகளை பாண்டியன் மற்றும் பாக்கியம் குடும்பத்தினர் சமாளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement