• Jan 19 2025

உயிருக்கு போராடும் ஆடுகளம் படத்தின் பிரபல நடிகர்! அதிர்ச்சி கொடுக்கும் புகைப்படம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான ஆடுகளம் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் தான் வி.ஐ.எஸ் ஜெயபாலன்.

இவர் இலங்கையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், நடிகரும் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதி, சமூக ஆய்வுகளிலும் ஈடுபட்டு பன்முகம்  கொண்டு திகழ்ந்துள்ளார் ஜெயபாலன்.

இலங்கையில் பிறந்த இவர், ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறி அதன்பின் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்து இருந்தார்.


இந்த நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாத ஜெயபாலன் அவர், மிகவும் ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.


நடிகர் ஜெயபாலனுக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், இவருடைய குடும்பம் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் இவரை சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement