• Jan 16 2026

பிக் பாஸ் பைனலில் நடக்கப்போகும் ராஜதந்திரம்! வின்னர் அறிவிப்பில் நிச்சயம் மாற்றம் நடக்கும்? Bigg Boss Tamil Season 7

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இன் பைனல் இன்னும் இரண்டு நாட்களில் நடக்க உள்ள நிலையில், இதில் யார் டைட்டில் வின்னராக வருவார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இதுவரை இடம் பெற்ற பிக் பாஸ் 6 சீசன்களை விடவும் இம்முறை இடம் பெற்ற பிக் பாஸ் 7வது  சீசன் முற்றிலும் மாறுபட்ட ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கான பரபரப்பு குறைந்தவாறே காணப்பட்டது. பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் இந்த முறை தான் ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரிகள் பிக் பாஸ் வீட்டிற்குள்  நுழைந்தனர்.

இதன் பிறகு ஆட்டம் கொஞ்சம் சூடு கண்டது. அதேபோலத்தான் பிரதீப்பின்  ரெட்  காட் விகாரத்தில் சிக்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடு பிடித்தது.


பிக் பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவுக்கு அடுத்தபடியாக மாயாவும் பூர்ணிமாவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 இன் உள்ளே அனுப்பப்பட்ட 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள், முக்கியமாக இன்றுவரை தமது நோக்கத்தை நோக்கி தொடர்பவர்கள் தான் அர்ச்சனா மற்றும் தினேஷ். இவர்கள் வந்த பிறகு பிக் பாஸ் ஆட்டம் மேலும் சூடு பிடித்தது எனலாம்.

இவ்வாறான நிலையில், தற்போது இன்னும் இரண்டு நாட்களில் பிக் பாஸ் சீசன் 7ற்கான பைனல் நடைபெற உள்ளது.

இதில் முடிந்தவரை கண்டெண்ட் கொடுத்தவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என கூறப்படுவதோடு, தற்போது  மாயாவுக்கு மட்டுமின்றி அர்ச்சனாவுக்காகவும் வெளியில் பிஆர் டீம் ப்ரோமோஷன் என்ற பெயரில் ஓட்டை விலைக்கு வாங்குவதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே, பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா அல்லது மாயா இருவரில் ஒருவருக்கே கிடைக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. இதில் வின்னர் அறிவிப்பில் மாற்றம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Advertisement

Advertisement