• Jan 18 2025

சிறகடிக்க ஆசை அடுத்தது: வலையில் சிக்க போகும் ஜீவா! முத்துவால் மனோஜுக்கு கிடைக்க போகும் பணம்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியலின் அடுத்த எபிசோட்டுக்கான கதைகள்  என்னவாக இருக்கும் என்பது வெளியாகி உள்ளது . நாளைய எபிசோட்டில் முத்து செய்ய இருக்கும் காரியங்கள் பரபரப்பை ஏற்றப்படுத்தி உள்ளது.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வாழக்கையை சுவாரசியமாக காட்டும் இந்த தொடரின் பழைய எபிசொட் பரபரப்பாக முடிந்திருந்த நிலையில் இதன் அடுத்த எபிசோட் என்னவாக இருக்கும் என்பது  வெளியாகியது.


மனோஜிற்கு பணம் தேவைப்படுவதினால் இருவரும் ஜீவாவை தீவிரமாக தேட போகிறார்கள். இனேகிரேஷனிலும் அவர்கள் முகவரி எதுவும் கொடுத்து விட்டு போகவில்லை அவர்கள் கனடாவே போகவில்லை கடைசி நேரத்தில் பிளானை கேன்சல் செய்துவிட்டார்கள் என்பது ரோகிணிக்கும் , மனோஜுக்கும் தெரிய வர போகிறது. உடனே ரோகிணி அப்ப அவ இங்கதான் லோக்கலுல எங்கயாவது இருக்க போற கண்டிப்பா பிடிச்சுறலாம் என ஐடியா கொடுக்க போகிறார். பழைய எபிசோடிலேயே தெரிந்திருக்கும் ஜீவா கைதராபாத் தான் போக போகிறார் என்று இந்த சமயத்திலேயே காரில் முத்து கேட்கும் போது கனடாவில் இருந்து வருகிறேன் என பொய் கூறுகிறார்கள்.இதே சமயத்தில் முத்து எனது தம்பி கனடா போகத்தான் ட்ரை பன்றான் என கூற ஜீவாவும் உங்கள் தம்பியை என்னை தொடர்புகொள்ள சொல்லுங்கள் என கூறுகிறார். இதனால் தானாக வந்து ஜீவா வலையில் சிக்கி மனோஜால் போன 27 லட்சம் ரூபாய் முத்துவால்  கிடைக்க போகிறது.

Advertisement

Advertisement