• Apr 23 2025

'வைல்ட் கார்ட்' வந்த வேகத்தில் வெளியேறப்போகும் போட்டியாளர்! இந்த வார எலிமினேஷன் ரிப்போர்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7ல் மாயா, ஐஷு, அர்ஜே பிராவோ, மணி, அக்‌ஷயா, அன்ன பாரதி, கானா பாலா, தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கினர். 

இதில் பலரும் புதிதாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள் தான். ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது அன்ன பாரதி இல்லை என்றால் கானா பாலா தான் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. 

இதேவேளை,  நாமினேஷன் பட்டியலில் மிகக்குறைந்த ஓட்டுக்களுடன் கானா பாலா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement