• Jan 18 2025

இவருக்கு இதே வேலையா போச்சி... இந்தியன் 2 படத்தில் தரமான வேலை செய்த அனிருத்... காப்பி அடித்த பாடல் என வைரலாகும் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் பார்ட் 1 மாபெரும் வெற்றியடைந்தது. இதனை அடுத்து தற்போது இந்தியன் பார்ட் 2 மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நம்ம இசையமைப்பாளர் அனிருத் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார்.  


கடந்த 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன். இது மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் பல ஆண்டுகள் கழித்து எடுக்க துவங்கினார். சில பிரச்சனைகள் காரணமாக நின்றுபோன இந்தியன் 2 படப்பிடிப்பு, அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியன் பாகம் இரண்டில் நடிகர் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், எஸ். ஜே. சூர்யா, மறைந்த நடிகர் விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நேற்று இந்தியன் 2 படத்திலிருந்து இந்தியன் தாத்தா சேனாபதியின் இன்ட்ரோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.


 இன்ட்ரோ வீடியோவில் கமல் ஹாசன் 'வணக்கம் இந்தியா, இந்தியன் Is Back' என கூறினார். இந்த வீடியோ வெளியாகி குறுகிய நேரத்தியே Youtubeல் பல லட்சம் பார்வையாளர்களை பெற்றது. இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவிற்கு இசையமைப்பாளர் அனிருத் சுவாரஸ்யமான பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார்.

வழமையாக காப்பி அடித்த பாடலை மாஸாக கட்டுவது அனிருத் வழக்கம் அந்நிலையில் Come Back Indian என பெயரிடப்படும் இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் சிலர் இந்த பாடல் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் "கொலம்பஸ் கொலம்பஸ்..." பாடலை காப்பியடித்து போடப்பட்டது போல் இருக்கிறது என கூறி வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.  

இதோ அந்த வீடியோவை பாருங்க..