• Aug 26 2025

"கோட்" ஹீரோயினி பகிர்ந்த வீடியோ... தெறிக்கவிடும் அப்டேட்... பயங்கர வெய்ட்டிங்ல் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.  கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்றைய தினம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என கூறப்பட்டது.


நடிகர் விஜயுடன் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், சினேகா உட்பட பலர் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் காணப்படுகின்றது. சமீபத்தில் கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி  ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்,


இந்த நிலையில், கோட் படத்தின் சென்சார் பணிகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று வெளியாக இருக்கும் ட்ரெய்லருக்காக கோட் பட நாயகி ஐஸ்வர்யா கல்பத்தி ஒரு விடியோவை ஷேர் செய்து காத்திருங்கள் இன்று 5 மணிக்கு கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது என ஷேர் செய்துள்ளார்.


Advertisement

Advertisement