• Aug 30 2026

தியேட்டர்களில் சக்கைப் போடு போடும் டிமாண்டி காலனி 2ன் இரண்டாவது நாள் வசூல் விபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இயக்குனர்களுள் அஜய் ஞானமுத்துவும் ஒருவராக காணப்படுகின்றார். இவர் ஏ.ஆர் முருகதாஸுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி, டிமாண்டி காலனி என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து வெளியிட்டு உள்ளார். தற்போது வரையில் டிமான்டி காலனி 2 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன.

முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் அனைவரும் இறந்து விடுவார்கள். இதனால் இரண்டாம் பாகத்தில் இந்த படம் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட போகின்றது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. மேலும் டெய்லரில் அருள்நிதி உயிருடன் இருப்பது போல காண்பிக்கப்பட்டதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்தது.


ஆனாலும் இந்த திரைப்படம் எந்தவித சொதப்பாலும் இல்லாமல் படத்தின் கதை சிறப்பாக காணப்பட்டதோடு ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்று வருகின்றது. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை ரசிகர்கள் சலிப்படையாமல் ஆர்வத்துடன் பார்த்துள்ளார்களாம்.

மேலும் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 3.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் இரண்டாவது நாளில்2.5 கோடிகளை  வசூல் செய்துள்ளது. அதன்படி இந்த படம் முதல் இரண்டு நாளில் மட்டும் ஆறு கோடிகளை வசூல் செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement